ஊரடங்கு தளர்வுகளால் பெட்ரோல்-டீசல் தேவை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதை தொடர்ந்து இந்தியன் ஆயில் நிறுவனம் தனது சுத்திகரிப்பு பணியை முழு வீச்சில் துவக்கி உள்ளது.
ஊரடங்கால் வாகனப் போக்குவரத்து பெருமளவில் முடங்கியதை அடுத்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எரிபொருள் தேவை பல மடங்கு குறைந்தது. இதனால் இந்தியன் ஆயில் நிறுவனம் தனது எண்ணெய் சுத்திகரிப்பு பணிகளை 30 சதவிகிதம் வரை குறைத்தது.
இந்த நிலையில் இன்று வெளியிட்ட அறிக்கையில் சுத்திகரிப்பு பணிகளை 83 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக அது தெரிவித்துள்ளது. நிறுவனத்திற்கு சொந்தமான 9 சுத்திகரிப்பு ஆலைகளும் படிப்படியாக உற்பத்தியை துவக்கியதாகவும், இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது.