வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. முற்பகலில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் பிற்பகலில் இறங்கியது.
இறுதியில் சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்ந்து 34 ஆயிரத்து 370ல் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 167ல் நிலை கொண்டது.
கடந்த 7 வர்த்தக தினங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 23 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 58 ஆயிரம் கோடி ரூபாயை திரும்ப எடுத்திருந்த நிலையில் மீண்டும் முதலீட்டை அதிகரித்துள்ளனர்.
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 53 காசுகளாக இருந்தது.