பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 60 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலையும் பேரலுக்கு 40 டாலர் என்ற உயர்வை நோக்கி சென்றுள்ளது.
இந்த காரணங்களால் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன் கடைசியாக மார்ச் 16 ஆம் தேதி, மாநிலங்கள் வாட் வரியை உயர்த்தியதால் பெட்ரோல்-டீசல் விலையும் உயர்ந்தது.