செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் சுழற்றிப் பார்க்கும் வசதி கொண்ட டிவியை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகமாகி செரோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டிவியை செல்போன்களைப் போல எந்த வகையிலும் சுழற்றிப் பார்த்துக் கொள்ள முடியும்.
இதனால் இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகும் அனைத்து வகை வீடியோக்களைப் பார்க்க முடியும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் விற்பனைக்கு வந்துள்ள செரோ டிவிக்கள் இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போன் மூலம் டிவியை திருப்பும் வசதி இருப்பதாகவும், இணையதளம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் செரோவை வாங்க முடியும் என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.