இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 2வது நாளாக சரிவடைந்தது.
காலையில் வர்த்தகம் ஏறுமுகத்துடன் தொடங்கி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 414 புள்ளிகள் வரை உயர்ந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 120 புள்ளிகள் வரை அதிகரித்தது. எனினும், ஐடி மற்றும் மருந்து நிறுவன பங்குகளை முதலீட்டாளர்களை விற்று தள்ளியதால் சந்தையில் இறங்குமுகம் ஏற்பட்டது.
இறுதியில் சென்செக்ஸ் 63 புள்ளிகள், நிப்டி 10 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 31 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 65 காசுகளாக இருந்தது.