ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் பெட்ரோல்-டீசல் தேவை 45.8 சதவிகிதம் குறைந்தது. இதனால் கடந்த 17 வருடங்களிலேயே இல்லாத அளவுக்கு எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் 28.8 சதவிகிதம் சரிந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்துக் கொண்டன.
அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி கடந்த மாதம் நாளொன்றுக்கு 36 லட்சம் பேரல்கள் என்ற அளவிற்கே எண்ணெய் சுத்திகரிப்பு நடைபெற்றது.
முன்னணி எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சென்ற மாதம் 53 சதவிகிதம் என்ற அளவிற்கும், அதன் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் 33 சதவிகிதம் என்ற அளவிற்கு மட்டுமே உற்பத்தியில் ஈடுபட்டன.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வைத்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம் ஜாம்நகர் ஆலையில் 87 சதவிகித உற்பத்தியை நடத்தியது. அதே போன்று இயற்கை எரிவாயு உற்பத்தியும் சென்ற மாதம் 18.6 சதவிகிதம் குறைந்தது.