இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 36 புள்ளிகள் சரிவுடன் இருந்த நிலையில், பின்னர் ஏறுமுகம் நீடித்தது. வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 622 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 187 புள்ளிகளும் அதிகரித்தது.
எச்டிஎப்சி, ரிலையன்ஸ் போன்ற அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்குகள் விலை உயர்ந்ததே இந்த ஏற்றத்துக்கு காரணமாக கருதப்படுகிறது. மருத்துவ துறை சார்ந்த நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், தொலைதொடர்பு துறை நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமானது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து, 75 ரூபாய் 80 காசுகளாக உள்ளது.