ஊரடங்கால் 2 மாதங்களாக சரிவை சந்தித்த பெட்ரோல், டீசல் விற்பனை இந்த மாத முதல் வாரத்தில் இருந்து சூடு பிடித்துள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஊரடங்கால் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எரிபொருள் தேவை குறைந்தது. பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக டிரக்குகள் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சாலையில் இயங்கத் துவங்கியதை அடுத்து கடந்த 15 நாட்களில் டீசல் விற்பனை சென்ற மாதத்தை விட 75 சதவிகிதமும், பெட்ரோல் விற்பனை 72 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது விமான எரிபொருள் விற்பனை 87 சதவிகிதமும், டீசல் விற்பனை 38 சதவிகிதமும் குறைந்துள்ளது.