நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கு சிறப்பு நிதி தொகுப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்ததன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றமடைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் சுமார் 400 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது.
ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ஏறிய புள்ளிகளில் 50 சதவீதம் வரை குறைந்தது. பின்னர் சென்செக்ஸ் 637 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
நிப்டி 187 புள்ளிகளில் நிலை கொண்டது. வங்கி, நிதி, வாகன உற்பத்தி, மருந்து நிறுவன பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியது சந்தையின் ஏற்றத்திற்கு வழிவகுத்தது. அன்னிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து, 75 ரூபாய் 46 காசுகளாக இருந்தது.