அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான கடன்கள் அனைத்தையும் ஒருமுறை மறுசீரமைப்பு செய்ய அனுமதிக்குமாறு வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் அமைப்பானFIDC பிரதிநிதிகள் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நடத்தி பேச்சுவார்த்தையில் இந்த கோரிக்கை விடப்பட்டது. கொரோனா மற்றும் ஊரடங்கால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வங்கிக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள 3 மாத கால சலுகையை தங்களுக்கும் நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், SIDBI மற்றும் NABARD வங்கிகளில் இருந்து கூடுதல் நிதியுதவி அளிக்குமாறும் வங்கி அல்லா நிதி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.