கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சரிகட்டுவதன் ஒரு அங்கமாக, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் வருவாய் உள்ளவர்களின் வருமான வரியை இப்போதுள்ள 30 ல்இருந்து 40 சதவிகிதமாக உயர்த்தலாம் என ஐஆர்எஸ் எனப்படும் இந்திய வருவாய்துறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
இல்லையெனில் அதற்கு மாற்றாக 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களிடம் இருந்து சொத்து வரி வசூலிக்கப்படுவதை மீண்டும் கொண்டுவரலாம் எனவும் அவர்கள் நேரடி வரி விதிப்பு வாரியத்திடம் அளித்த அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
3 முதல் 6 மாதங்களுக்கு குறுகியகாலத்திற்கு இதை அமல்படுத்தலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் துணைவரி விகிதத்தை ஒரு வருட காலத்திற்கு அதிகரிப்பதன் மூலம் மத்திய அரசுக்கு15 முதல் 18 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதலாக கிடைக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்