பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களின் மொபைல் வேலிடிட்டியை மே மாதம் 5ஆம் தேதி வரை இலவசமாக நீட்டித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில், மனிதாபிமான அடிப்படையில்,பிஎஸ்என்எல் தனது வேலிடிட்டி முடிவுற்ற மொபைல் வாடிக்கையாளர்களும், தனது கணக்கில் உள்ள தொகை முழுவதும் தீர்ந்துவிட்ட வாடிக்கையாளர்களும் பயனுறும் வகையில் அவர்களின் மொபைல் வேலிடிட்டிக் காலத்தை மே மாதம் 5 ஆம் தேதி வரை இலவசமாக நீட்டித்துள்ளது.
இதன்மூலம் இந்த வாடிக்கையாளர்கள் தனது மொபைல் இணைப்பில் உள்வரும் அழைப்புகளைத் தொடர்ந்து பெற முடியும்.