ஊரடங்கால் ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் பெட்ரோல், டீசல் தேவை கடந்த ஆண்டைவிட 50 விழுக்காடு அளவு குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் பெட்ரோல் தேவை 64 விழுக்காடும், விமான எரிபொருளின் தேவை 94 விழுக்காடும் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் சமையல் எரிவாயுத் தேவை கடந்த ஆண்டை விட 21 விழுக்காடு அதிகரித்துள்ளது. பன்னாட்டு எரியாற்றல் முகமை இந்தியாவின் ஆண்டு பெட்ரோலியத் தேவை இரண்டு புள்ளி நான்கு விழுக்காடு அதிகரிக்கும் என மார்ச் மாதத்தில் கணித்தது.
அதற்கு மாறாக 5 புள்ளி 6 விழுக்காடு தேவை குறையும் எனத் தற்போது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் பெட்ரோலியத் தேவை 9 விழுக்காடும், டீசல் தேவை 6 விழுக்காடும் குறையும் எனக் கணித்துள்ளது.