வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆயிரத்து ஐம்பது புள்ளிகளுக்கு மேல் உயர்வடைந்தது.
கொரோனா பாதிப்புக்குப் பின் பங்குச்சந்தைகள் பெருமளவு சரிவைச் சந்தித்தன. கடந்த ஒருவாரமாகப் பங்குச்சந்தையில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி வருகிறது. இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் ஆயிரத்து 73 புள்ளிகள் உயர்ந்து 31 ஆயிரத்து 676 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 307 புள்ளிகள் உயர்ந்து ஒன்பதாயிரத்து முந்நூறாக இருந்தது. வங்கிகள், நிதி நிறுவனங்களின் பங்கு விலை 6 விழுக்காடு வரை உயர்ந்தது.