தேவைக்கு அதிகமான உற்பத்தி மற்றும் கொரோனா வைரஸ் எதிரொலியால் சர்வதேச கச்சா எண்ணைய் விலை மீண்டும் சரிந்துள்ளது.
கொரோனா தொற்று பரவியதில் இருந்தே கச்சா எண்ணெய் நுகர்வு குறைந்து விலையும் சரியத் துவங்கியது. இந்த நிலையில் உற்பத்தியை நாளொன்றுக்கு சுமார் 98 லட்சம் பேரல்கள் வரை குறைக்க ரஷ்யாவும் சவூதி உள்ளிட்ட நாடுகளும் முடிவு செய்தன,
ஆனால், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடுகள் தீவிரமாக உள்ளதால், இந்த முடிவு கச்சா எண்ணெய் விலையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பிரென்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 29.09 டாலராகவும், அமெரிக்க கச்சா எண்ணெய் 20.07 டாலராகவும் இன்று குறைந்தது.