இந்தியப் பங்குச்சந்தையில் வணிகம் ஏற்றம் கண்டதால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் எண்ணூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
கொரோனா பாதிப்பின் காரணமாகக் கடந்த ஒன்றரை மாதங்களாக உலக நாடுகளிலும் இந்தியாவிலும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்தன.
இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. 10 மணியளவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 871 புள்ளிகள் உயர்ந்து 30 ஆயிரத்து 765 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 242 புள்ளிகள் உயர்ந்து எட்டாயிரத்து 990 ஆக இருந்தது. மருந்து நிறுவனங்கள், உலோகத் தொழில் நிறுவனங்கள், வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை 5 விழுக்காடு முதல் 14 விழுக்காடு வரை உயர்ந்தது.