கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கூடுதலாக வரும் ஆர்டர்களை சமாளிக்க புதிதாக 10 ஆயிரம் ஊழியர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக ஆன்லைனில் மளிகை பொருட்கள் விற்கும் நிறுவனமான பிக்பாஸ்கட் தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்படும் நபர்கள் கிட்டங்கி மற்றும் ஹோம் டெலிவரி பணிகளுக்கு பயன்படுத்தப்படுவார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பிக்பாஸ்கட் சேவை நடக்கும் 26 நகரங்களிலும் இந்த ஆள் எடுப்பு பணி மேற்கொள்ளப்படும்.
கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் கொச்சி மற்றும் இந்தூர் தவிர இதர அனைத்து நகரங்களிலும் ஹோம் டெலிவரி சேவை தடங்கலின்றி நடப்பதாகவும் பிக்பாஸ்கட் தெரிவித்துள்ளது.