கொரோனா பாதிப்பு எதிரொலியால் இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.
சீனாவில் இருந்து உலகின் பிற நாடுகளுக்குக் கொரோனா பரவியதில் இருந்தே வணிகம், தொழில்துறைகளில் இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி ஆகியன பாதிக்கப்பட்டன.
மார்ச் 25ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் மேலும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இந்நிலையில் வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 674 புள்ளிகள் சரிந்து 27 ஆயிரத்து 591 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 170 புள்ளிகள் சரிந்து எட்டாயிரத்து 84 ஆக இருந்தது. தனியார்துறை வங்கிகளின் பங்குவிலை 9 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.
அதே நேரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை 10 விழுக்காடு வரை அதிகரித்தது.