வாடிக்கையாளர்கள் கடமையை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்த யெஸ் வங்கி ரிசர்வ் வங்கியிடமிருந்து 60000 கோடி ரூபாய் கடன் பெறுகிறது.
மார்ச் 18ம் தேதியுடன் யெஸ் வங்கி, புனரமைக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளுடன், பழைய கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு, மீண்டும் வங்கி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி யெஸ் வங்கிக்கு கடனாக, 60,000 கோடி ரூபாய் வழங்கவுள்ளது.யெஸ் வைப்புத்தொகையாளர்கள், வாடிக்கையாளர்கள், கடமைகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதை உறுதி செய்வதற்காக கடன் வரி கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படவுளளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது தேவைப்பட்டால் மத்திய வங்கி தேவையான பணப்புழக்க ஆதரவை வழங்கும் என்றும் இது வைப்புத்தொகையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் காரணியாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.