அரசு கடன்களில், பொதுக்கடன்கள் சென்ற 2வது காலாண்டை விட 3.2% உயர்ந்து 93.89 லட்சம் கோடியாக உள்ளது.
அரசாங்கத்தின் மொத்த கடன்கள் 2019 டிசம்பர் மாத இறுதியில் ரூ .93.89 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்று நிதி அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.
பொதுக் கணக்கின் கீழ் உள்ள கடன்கள் உட்பட, 2019 செப்டம்பர் மாத இறுதியில் ரூ .91,01,484 கோடியாக உள்ளதாகவும், 2019 டிசம்பர் மாத இறுதியில் நிலுவையில் உள்ள மொத்த கடன்களில், பொதுக் கடன்கள் 90.4 சதவீதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடைந்த கடனின் விகிதம் அதன் முந்தைய காலாண்டு நிலை 5.41 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2019 டிசம்பரின் இறுதியில் 6.64 சதவீதமாக இருந்தது என பொது கடன் மேலாண்மை காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 1 முதல் 5 ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் கடன் விகிதமும் 2019 டிசம்பர் இறுதியில் 25.09 சதவீதமாக இருந்துள்ளதாகவும், இது 2019 செப்டம்பர் இறுதியில் 23.65 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளில் முதிர்ச்சியடைந்த கடன் 2019 டிசம்பர் மாத இறுதியில் நிலுவையில் உள்ள மொத்த கடனில் 31.7 சதவிகிதம், மற்றும் நிலுவையில் உள்ள பங்குகளின் 6.3 சதவிகிதம் சராசரியாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.