எஸ்பிஐ முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா Salesforce.com INC-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்
மும்பையை தளமாகக் கொண்ட அமெரிக்க கிளவுட் அடிப்படையிலான சேவை வழங்குநர் Salesforce.com INC-ல் முன்னாள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 64 வயதான பட்டாச்சார்யா வங்கியின் முதல் பெண் தலைவராக இருந்துள்ளார். 2017-ல் வங்கி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது உலகளாவிய கொடுப்பனவு வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்விஃப்ட் இந்தியாவின் தலைவராக உள்ளார். இந்த நிலையில், சேல்ஸ்ஃபோர்ஸ் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பட்டாச்சார்யா நம்பகமான, அனுபவம் வாய்ந்த நபராக இருந்து வருகிறார் என சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வரும், 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5,00,000 க்கும் மேற்பட்ட வேலைகள் மற்றும் 67 பில்லியன் டாலர் புதிய வணிக வருவாயை சேல்ஸ்ஃபோர்ஸ் உருவாக்கும் என்று சர்வதேச தரவுக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுக்கு பணியாற்றுவதற்காக நிறுவனத்துடன் அரசாங்கமும் கூட்டு சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.