கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் பீதியால் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் முட்டை கொள்முதல் விலை 1 ரூபாய் 95 காசுகளாக குறைந்துள்ளது.
நாமக்கல் சுற்றுவட்டாரங்களில் தினமும் 3 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு கேரளாவுக்கு மட்டும் தினமும் 70 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டு வந்தன.
கடந்த மாதம் முட்டை சுமார் 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா மற்றும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பீதியால் முட்டைகளை வாங்க மக்கள் தயங்குவதையடுத்து 25 கோடிக்கும் அதிக முட்டைகள் பண்ணைகளிலேயே தேங்கி 200 கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்தித்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையை 2 ரூபாய் 65 காசுகளில் இருந்து 70 காசுகள் குறைந்து 1 ரூபாய் 95 காசுகளாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியாவில் பறவை காய்ச்சல் காரணமாக முட்டை விலை 1 ரூபாய் 95 காசுகளுக்கு குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த நிலை ஏற்பட்டுள்ளது.