நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.2 சதவிகிதம்தான் என ஸ்டேண்டட் & ஃபூர்ஸ் குளோபல் கணித்து வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, உலக பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்றுள்ளதாகவும், அதன்படி இந்திய பொருளாதார வளர்ச்சியானது 2020ம் ஆண்டில் 5.2% ஆக உள்ளதாக அமெரிக்க வர்த்தக நிறுவனமான, எஸ் அண்ட் பி குளோபல் மதிப்பீடுகள் கூறியுள்ளது. இது முந்தைய மதிப்பீடான 5.7% லிருந்து மிக குறைவு. ஆசிய பசிபிக் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்த நிலைக்கு செல்வதால், 3% குறைவாக செல்லும் என அந்த நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முதல் காலாண்டில் ஏற்பட்ட தடை, அமெரிக்க, ஐரோப்பா முழுவதும் ஏற்பட்டுள்ள பணி நிறுத்தங்கள் உள்ளிட்டவைகள் பொருளாதார மந்த நிலைக்கு கொண்டு செல்வதாக ஆசிய பசிபிக் பொருளாதார நிபுணர் ஷான் ரோச் தெரிவித்துள்ளார். இந்த மந்த நிலை மேலும் அதிகரிக்கும்பட்சத்தில் பொருளாதார வளர்ச்சி 2 ஆண்டுகளுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிரந்த வருமான இழப்புகள் அந்த நிறுவன கணிப்பின்படி, குறைந்தது 400 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது