இந்தியன் ஆயில் நிறுவனம் பங்கு ஒன்றிற்கு இடைக்கால ஈவுத்தொகையாக, 4.25 வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற இயக்குநர்கள் குழு கூட்டதின் போது, மும்பை பங்கு சந்தையிடம் நேற்று தெரிவித்துள்ளதன்படி, பங்குதாரர்களுக்கு 42.25% ஈவுத்தொகையை வழங்குவதாக முடிவு செய்துள்ளதாகவும், இதன்மூலம், 2019-20ம் ஆண்டிற்கான 10 முகமதிப்புடன் பங்கு ஒன்று 4.25 ஈவுத்தொகையாக கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இதனால் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 51.50% பங்குகளை மத்திய அரசு மூலதனமாக கொண்டுள்ளதால், அதன் ஈவுத்தொகை அரசிற்கு 2060 கோடி வரிவருவாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பங்குதாரர்களின் கணக்குகளில் ஈவுத்தொகை வரவு வைக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.