எஸ் வங்கியின் 49 விழுக்காடு பங்குகளை வாங்குவதில் 6 முதலீட்டாளர்களைச் சேர்த்துக்கொள்ள ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.
நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ள எஸ் வங்கியை மறுசீரமைக்க அதன் 49 விழுக்காடு பங்குகளை ஸ்டேட் வங்கி வாங்கிக்கொள்ளும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் எஸ் வங்கிப் பங்குகளை வாங்க ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மகிந்திரா வங்கி ஆகியவை தலா ஆயிரம் கோடி ரூபாயும், ராதாகிருஷ்ணன் தமானி, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, அசீம்பிரேம்ஜி அறக்கட்டளை ஆகியோர் தலா ஐந்நூறு கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளனர்.
ஸ்டேட் வங்கி ஏழாயிரத்து 250 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. எஸ் வங்கியின் நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டுள்ள பிரசாந்த் குமாரை, அந்த வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கவும் ஸ்டேட் வங்கி பரிந்துரைத்துள்ளது.