பாரத் பெட்ரோலியம் வரும் ஏப்ரம் மாதம் 2 மில்லியன் கூடுதல் எண்ணெய் பீப்பாய்களை சவுதியிடம் வாங்குவதாக அறிவித்துள்ளது.
இந்திய பெட்ரோலிய நிறுவனமான, பாரத் பெட்ரோலியம் கார்ப் ஏப்ரல் மாதத்தில் 2 மில்லியன் பீப்பாய்கள் கூடுதல் சவுதி எண்ணெயை வாங்கவுள்ளது. இதன் மூலம் விற்பனை விலையை குறைத்து, ஒரு நாளைக்கு 12.3 மில்லியன் பீப்பாய்கள் (Bpd) பதிவு செய்து உற்பத்தியை உயர்த்துவதற்கான திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக, பிபிசிஎல் சுத்திகரிப்பு நிலையங்களின் தலைவர் ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் கூடுதல் எண்ணெய் வாங்குவதையும் ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.