ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், பந்தன் வங்கி 125 வங்கி கிளைகளை திறந்துள்ளது.
புதிய கிளைகள் திறப்பதற்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கிய நாட்களில் இருந்து பந்தன் வங்கி 15 மாநிலங்களில், 125 வங்கி கிளைகளை திறந்து வைத்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவில், தற்போது பந்தன் வங்கியின் கிளைகளின் எண்ணிக்கை 1,013 ஆக உள்ளது. 125 புதிய வங்கி கிளைகளை தவிர்த்து,
பந்தன் வங்கி உத்திரபிரதேசத்தில் 42, ராஜஸ்தான் 29, மத்திய பிரதேசத்தில் 12, தெலுங்கானாவில் 7, பீகாரில் 6, சத்தீஸ்கரில் 5 ஒரிசாவில் 4 மற்றும் தமிழ்நாட்டில் 3 கிளைகள் திறந்துள்ளது. மேலும், உத்தரகாண்ட், கர்நாடகா, மகாராஷ்ட்ரா மற்றும் அசாமில் தலா 3 கிளைகளும், டெல்லி, மேற்கு வங்கத்தில் தலா 1 கிளைகள் தொடங்கியுள்ளது.டிசம்பர் 31 2019 நிலவரப்படி,இந்த வங்கியில் 19 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும், வங்கியின் மொத்த வணிகம் 1,20,364 கோடியாக உள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.