அடுத்த நிதியாண்டில் இருந்து இருசக்கர வாகனங்களை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் மூத்த தலைவர் யாவீந்தர் சிங் குலேரியா தெரிவித்துள்ளார். அதன்படி, நிலையான விரிவாக்கத்தை விரும்புவதால், மிகச் சிறந்த தயாரிப்புகளை வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யவேண்டியுள்ளதாகவும், இதனால், அடுத்த நிதியாண்டு முதல் அதிக திறனுள்ள இருசக்கர வாகனங்களை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நடுத்தர எடை பிரிவில், எதிர்காலங்களில் 500சிசி வரை திறன் கொண்ட வகையில் அதிக வாகனங்களை தயாரிக்க உள்ளதாகவும், அனைவரும் வாங்கும் வகையில் விலை நிர்ணையம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக, அடுத்த ஆண்டு முதல் அனைத்து மாடல் வாகனங்களையும், நிறுவனத்திற்கு சொந்தமான ஆலைகளிலிருந்தே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.