கயிறு வாரியத்திற்கு 35 ஆயிரம் கோடி வர்த்தக இலக்காக மத்திய அரசின் கயிறு வாரியம் நிர்ணையம் செய்துள்ளது.
கயிறு வாரியம் மூலமாக, தென்னை நார் மற்றும் நார் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வணிகத்துக்கான இலக்கு 35 ஆயிரம் கோடியாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலக்கை அடைவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசின் கயிறு வாரியம் வழங்க உள்ளது.
இந்தியாவின் தென்னை நார் ஏற்றுமதி வணிகம் அதிகளவில் நடைபெற்று வருவதாகவும், அதில் தமிழகத்தை சேர்ந்த பொள்ளாச்சியில் அதிகளவில் ஏற்றுமதி நடப்பதால், பொள்ளாச்சிக்கு சிறந்த பொருளாதார நகரம் என அந்தஸ்தையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ், செயல்படும் கயிறு மூலமாக கடந்த 10 ஆண்டுகளில் ஏற்றுமதி 2,000 கோடியாகவும், உள்நாட்டு வணிகம் 10 ஆயிரம் கோடியாகவும் அதன் இலக்கு நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. இதில், வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் தென்னை நார் மற்றும் நார் சார்ந்த பொருட்களுக்கான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வணிகத்திற்கு 35 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.