நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் எஸ் வங்கியின் நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில், அந்த கட்டுப்பாடுகள் மிகவும் அவசியமானவை என்றும், 30 நாட்களுக்குள் அந்த வங்கி சீரமைக்கப்பட்டு விடும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்தார்.
எஸ் வங்கியின் 49 சதவிகித பங்குகளை எஸ்பிஐ வாங்கும் திட்டத்திற்கு அதன் இயக்குநர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எஸ் வங்கியை நிர்வகிக்க எஸ்பிஐ முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ் வங்கிக்கு நேற்று விதிக்கப்பட்ட தடையால் அதன் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே எஸ் வங்கி பிரச்சனையால், அதன் கூட்டு டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமான PhonePe கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.