அனில் அம்பானியின் திவாலான தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) மற்றும் அதன் துணை நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான தீர்மானத் திட்டத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஏற்றுக்கொண்டது. ஆர்.காம் மற்றும் அதன் துணை நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் ஆகியவற்றின் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கடன் வழங்கியவர்கள், 23,000 கோடி ரூபாய் வசூலிக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த யு.வி. அசெட் புனரமைப்பு நிறுவனம் (UVARC) ஆர்.காம் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் சொத்துக்களுக்காக ரூ .14,700 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏலத்தில் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் இன்ஃப்ராடலின் கோபுரம் மற்றும் ஃபைபர் சொத்துக்களுக்களை ரூ .4,700 கோடி ஏலத்தில் எடுத்ததாக அறிவித்தது.
அனில் அம்பானி தலைமையிலான ஆர்.காமின் பாதுகாக்கப்பட்ட கடன் சுமார் ரூ .33,000 கோடியாக உள்ள நிலையில், கடன் வழங்குநர்கள் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 49,000 கோடி ரூபாய் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. செயலிழந்த தொலைத் தொடர்பு ஆபரேட்டரான ஆர்காம் அதன் அனைத்து சொத்துக்களையும் விற்பனைக்கு வைத்துள்ளது. அதில் ஸ்பெக்ட்ரம் ஹோல்டிங் 122 மெகா ஹெர்ட்ஸ் டவர் பிசினஸ், ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் மற்றும் தரவு மையங்கள் ஆகியவை அடங்கும்.