ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 784 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நேற்று 4,122 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை 98 ரூபாய் உயர்ந்து 4,220 ரூபாயாக உள்ளது. நேற்று 32,976 ரூபாயாக இருந்த சவரன் தங்கம் விலை 784 ரூபாய் அதிகரித்து 33,760 ரூபாயாக உள்ளது. இதேபோல் நேற்று 49,700 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று 700 ரூபாய் உயர்ந்து 50,400 ரூபாயாக இருந்தது.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு, கொரானா வைரஸ் காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்திருப்பது உள்ளிட்டவையே காரணமென இந்திய தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க மாநில துணை தலைவர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தங்கம் விலை அதிகரிப்பு குறித்து இந்திய தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க மாநில துணைத் தலைவர் சாந்தகுமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாந்தகுமார், இறக்குமதி வரியை குறைத்தால் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.