ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 824 ரூபாய் உயர்ந்து, 33 ஆயிரம் ரூபாயை மீண்டும் தாண்டியுள்ளது.
கொரானா வைரஸ் பீதி காரணமாக தங்கத்தின் மீதான முதலீட்டை பாதுகாப்பானதாக கருதி, அதன்மீது உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் அதிகளவு முதலீடு செய்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களினால் இந்தியாவில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மாதம் 24ம் தேதி முதன்முறையாக சவரன் 33 ஆயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு விலை குறைந்த தங்கம் விலை, மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
ஒரு கிராம் தங்கம் விலை நேற்று 4 ஆயிரத்து 25 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 103 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 128 ரூபாயாக விற்பனையானது.
இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை நேற்று 32 ஆயிரத்து 200 ரூபாயாக இருந்தநிலையில் இன்று 824 ரூபாய் அதிகரித்து 33 ஆயிரத்து 24 ரூபாயாக விற்பனையானது.
இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 48 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளி இன்று ஆயிரத்து 500 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரம் ரூபாயாக இருந்தது