மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செல்போன்கள், அதன் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மொத்தம் 42 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், செல்போன்கள், அதன் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆண்டு விற்பனை மதிப்பு உயர்வின் அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஐந்தாண்டுகளுக்கு மொத்தம் 42 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கும் திட்டம் ஆகஸ்டு மாதத்தில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிக விலைகொண்ட செல்போன்களை தயாரிக்கும் ஆப்பிள், சாம்சங், மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பயனடையும். அதேநேரத்தில் மின்னணுக் கருவிகள் உற்பத்தியில் சீனா, வியட்நாம், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் வளர்ச்சியடையும்.