ஏர் இந்தியா நிறுவனத்தை மதிப்பிட்டு வருவதாகவும், அப்பணி முடிந்தபிறகு, அந்நிறுவனத்தை வாங்க ஒப்பந்தபுள்ளி (bid) கோருவது குறித்து முடிவு செய்யப்படும் என்று விஸ்தாரா (vistara) நிறுவனம் தெரிவித்துள்ளது.
நஷ்டத்தில் செயல்படும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கும் விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதை வாங்க விரும்பும் தனியார் நிறுவனங்கள், இம்மாதம் 17ம் தேதிக்குள் விருப்பத்தை தெரிவிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
டாடா குழுமம் அதை வாங்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதுகுறித்து அக்குழுமத்தின் ஒரு பிரிவான விஸ்தாரா விமான நிறுவன தலைவர் பாஸ்கர் பட்டிடம் (basker bhat) கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ஏர் இந்தியாவை மதிப்பிட்டு வருவதாகவும், அதுமுடிந்தபிறகு ஒப்பந்தபுள்ளி கோருவதா, வேண்டாமா என்று முடிவு செய்யப்படும் என பதிலளித்தார்.