ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளை மட்டும் வாங்குமாறு பொதுமக்களுக்கு இந்திய தர நிர்ணய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பான செய்திக்குறிப்பில், 2021 ஜனவரி 15 முதல் ஹால்மார்க் முத்திரையுடன் 14, 18 மற்றும் 22 கேரட் என 3 கிரேடுகளில் மட்டுமே தங்கம் விற்க வேண்டும் என்ற மத்திய அரசு உத்தரவை மேற்கோள் காட்டியுள்ளது.
இதனால், பி.ஐ.எஸ். ஹால்மார்க் தர முத்திரை, தங்கத்தின் கேரட் அளவு, மதிப்பீடு மையத்தின் பெயர், நகைக்கடை முத்திரை, ரசீது உள்ளிட்டவற்றை பார்த்து நுகர்வோர் வாங்க இந்திய தர நிர்ணய அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நகை பரிசோதனைக்கூடங்கள் பற்றிய தகவல்களை www.bis.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளது.