ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் வீட்டில் இரண்டு முறை அத்துமீறியதாகவும், அந்த நிறுவன அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும், இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகேஷ் சர்மா என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டிம் குக்கின் செல்போனில் அச்சுறுத்தும் வாய்ஸ்மெயில் செய்திகளை அனுப்பிய இந்த நபர், டிம் குக்கை ரகசியமாக பின்தொடர்ந்து தொல்லை அளித்த தாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் ராகேஷ் சர்மா மீது தொடரப்பட்ட இந்த வழக்கில் அவர் ஆப்பிள் நிறுவனத்திற்கு தொல்லை அளிக்க க்கூடாது என்று நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை வரும் 3 ஆம் தேதி நடக்கிறது. இதனிடையே ஆப்பிள் நிறுவனம் தம்மை கொலை செய்ய முயற்சித்ததாக ராகேஷ்சர்மா கூறி இருக்கிறார்.