பல்வேறு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 19 ஆயிரத்து 950 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 498 கோடி ரூபாய் இழப்பீடுத் தொகை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-18ம் நிதியாண்டில் 41,146 கோடி ரூபாயும், 2018-19ம் நிதியாண்டில் 69,275 கோடி ரூபாயும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டதாக நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.