கடந்த 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு ஐரோப்பிய யூனியன் வர்த்தகத்தால் கிடைக்கக்கூடிய உபரி லாபம் புதிய உச்சத்தை எட்டியது.
2018ஆம் ஆண்டை விட 11 சதவீதம் அதிகரித்து அது 165 புள்ளி 5 பில்லியன் டாலராக உயர்ந்து காணப்பட்டது. புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஐரோப்பிய யூனியனுக்கு அதிபர் டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலும் அமெரிக்க-ஐரோப்பிய யூனியன் வர்த்தகம் உயர்ந்தே காணப்படுகிறது.
சீனாவுடன் அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் புதிய ஒப்பந்தம் மேற்கொண்டதற்கு கடும் விமர்சனத்தை முன்வைத்தார் டிரம்ப் . நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலை சந்திக்க இருப்பதால் அதற்கு முன்பே புதிய ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஐரோப்பிய யூனியன் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாகவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.