மத்திய அரசிற்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையில் எவ்வளவு செலுத்த முடியும் என, மதிப்பிட்டு வருவதாக வோடாபோன்-ஐடியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை, உடனடியாக செலுத்துமாறு தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டது. இதை ஏற்று வரும் 20ஆம் தேதிக்குள் ரூபாய் 10 ஆயிரம் கோடி செலுத்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து இருந்தது.
ஆனால், சுமார் 55 ஆயிரம் கோடி வரையில் செலுத்த வேண்டிய வோடாபோன்-ஐடியா நிறுவனம் அமைதிகாத்து வந்தது. இந்நிலையில், நிர்வாகத்தால் தற்போது எவ்வளவு தொகையை செலுத்த முடியும் என மதிப்பிடப்பட்டு வருவதாகவும், அடுத்த சில தினங்களுக்குள் அந்த தொகை செலுத்தப்படும் எனவும் வோடாபோன்-ஐடியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.