கடந்த ஆண்டில் தங்களுக்கு ஒன்று புள்ளி 36 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குய்லூம் ஃபாரி செய்தியாளர்களிடம் பேசும்போது, 2019ம் ஆண்டு மிகப் பெரும் சாதனையை தங்கள் நிறுவனம் படைத்ததாகக் குறிப்பிட்டார்.
ஆனால் கூடுதல் மேம்பாட்டுச் செலவுகள் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணையைத் தீர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு அதிக அளவில் அபராதம் கட்டவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் குய்லூம் கூறினார்.
அபராதத் தொகையாக 3 புள்ளி 6 பில்லியன் யூரோக்கள் விதிக்கப்பட்டால் கடந்த ஆண்டு ஒன்று புள்ளி 36 பில்லியன் நிகர இழப்பை ஏர்பஸ் நிறுவனம் சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.