அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த நடிகை கல்கி கோச்சலின், திருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தை பெற்றுள்ளார்.
புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த பிரெஞ்சு பெண்ணான கல்கி கோச்சலின், ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். இந்தி பட இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்பை காதலித்து 2011ல் திருமணம் செய்து, 2015ல் விவாகரத்து பெற்றார்.
தனக்கு தமிழ் நன்றாகத் தெரிந்தும் தமிழில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வரவில்லை என்று கூறிவந்த நிலையில், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் ((Guy Hershberg)) என்பவரை காதலித்து வருவதோடு, லிவிங் டுகெதராக வாழ்ந்து வந்தனர். மகப்பேறு அடைந்த கல்கி கோச்சலின், அதுகுறித்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளியன்று பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.