தர்பார் பட விவகாரத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசிடம் பிரச்சனை செய்வது தொழில தர்மம் அல்ல என்றும் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி கூறினார்.
சென்னையில் பேசிய அவர் ஆர்.கே.செல்வமணி, வசூலாகாது என தெரிந்தும் சில விநியோகஸ்தர்கள் அளவுக்கு மீறி பணத்தை கொடுத்து படத்தை வாங்குகிறார்கள் என்றார்.
நடிகர்களின் சம்பள உயர்வுக்கு தயாரிப்பாளர்களே காரணம் என்ற ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் கொடுப்பதாலேயே நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்றார்.
உச்ச நடிகர்களில், நடிகர் விஜய் மட்டுமே தமிழகத்தில் படப்பிடிப்பை நடத்துகிறார் என்று கூறிய செல்வமணி, சின்ன சின்ன காரணங்களைக் காட்டி பெரும்பாலான படப்பிடிப்புகள் வெளிமாநிலங்களில் நடத்தப்படுவதால் இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோவதாகவும் கூறினார்.