திரைப்படங்களில் பாட வைப்பதற்கு சங்கர் மகாதேவனின் மகனாக இருந்தாலும் , பார்வையற்ற மாற்றுதிறனாளி திருமூர்த்தியாக இருந்தாலும் தனக்கு ஒன்று தான் என்று இசையமைப்பாளர் இமான் தெரிவித்தார்.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் சீவா நடிப்பில் சீறு என்ற புதிய படத்தின் அறிமுக விழா சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடந்தது. இதில் இசையமைப்பாளர் இமான் இசையில் கண்பார்வையற்ற மாற்றுதிறனாளியான பாடகர் திருமூர்த்தியின் செவ்வந்தியே பாடல் அனைவரையும் கவர்ந்தது
விழாவில் பேசிய இசையமைப்பாளர் இமான் தனக்கு சங்கர் மகாதேவன் மகனாக இருந்தாலும், மாற்றுதிறனாளியான திருமூர்த்தியாக இருந்தாலும் ஒன்று தான் என்று குறிப்பிட்டார்
இமான் இசையில் வெளியான விஸ்வாசம் படத்தின் ஹிட் பாடலான கண்ணான கண்ணே பாடலை வாட்ஸ் ஆப்பில் பாடியதன் மூலம் பிரபலமானவர் திருமூர்த்தி என்பது குறிப்பிடதக்கது.
சாதிக்க ஊனம் ஒரு தடையில்லை என்பதற்கு திருமூர்த்தி நிகழ்கால எடுத்துக் காட்டு..!