தனது கட்சி மற்றும் தன்னை நம்பியுள்ள குடும்பங்களுக்கான பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்காகவே, மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளதாக நடிகர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ஜன சேனா என்ற கட்சியை தொடங்கிய பவன் கல்யாண் , அரசியலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறாத நிலையில், சுமார் 2 ஆண்டு இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்துவருகிறார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள பவன் கல்யாண், தனது கட்சி எந்த பெரு முதலாளிகளின் ஆதரவிலும் இயங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.