சூர்யாவின் நடிப்பில் கோடைவிடுமுறையில் திரைக்கு வர தயாராகி வருகிறது சூரரை போற்று திரைப்படம். இந்த படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, "சூரரை போற்று" என டைட்டில் வைத்ததற்கான காரணங்களை தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை பார்த்து பிரமித்து திரைப்படமாக எடுக்கப்பட்டு வருவது தான் சூரரை போற்று. ஆனால் முழுவதுமாக கோபிநாத்தை வைத்து கதை பின்னாமல், கூடுதலாக சில விஷயங்கள் சினிமாவிற்காக சேர்த்துளேன்.
மக்களுக்கு அதிகம் தெரியாத ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை பற்றிய படம் என்பதால், அவர் என்ன சாதித்தார், படத்தில் புதிதாக என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தில் மக்கள் திரைப்படம் பார்ப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். சூரரை போற்று திரைப்படம் ஏர்லைன்ஸ், ஏரோப்ளைன், பிசினஸ் சம்பந்தப்பட்டது என்பதால் புரிய சிரமமாக உள்ள விஷயங்களை மக்களுக்கு புரியும் வகையில் எளிமையாக படமாக்கியதில் கொஞ்சம் கஷ்டம் இருந்தது.
பாரதியாரின் அச்சம் தவிர் கவிதைப்படி சூரன் என்றால் அறிவாளி, கற்று தேர்ந்தவன் என பொருள். அதன்படி பார்த்தால் இப்படத்திற்கு சூரரை போற்று டைட்டில் பொருத்தமாக தோன்றியது. மேலும் பலம் வாய்ந்த போட்டிகள் நிறைந்த துறையில் நுழைந்து, தனெக்கென தனி இடம்பிடித்து , தொழில்துறையில் சூரசம்ஹாரம் நிகழ்த்தியவரின் கதை என்பதாலும் இந்த டைட்டிலை வைக்க முடிவு செய்யப்பட்டது என்றார்.