செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை இந்தி நடிகர் சல்மான் கான் தட்டிப்பறித்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராதே படத்தின் படப்பிடிப்புக்காக கோவாவுக்கு அவர் வந்துள்ளார்.
இந்நிலையில் விமான நிலையத்தில் சல்மான் நடந்து வந்தபோது, அவருக்கு முன்பு வந்த ரசிகர் ஒருவர் தன்னிடம் இருந்த செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். இதை கண்டு ஆத்திரமடைந்த சல்மான், பாய்ந்து சென்று போனை தட்டி பறித்தார். பின்னர் விமான நிலையத்திலிருந்து வேகமாக வெளியேறி விட்டார்.
செல்பி எடுத்தவர், கோவா விமான நிலைய ஊழியராவார். இதுகுறித்து அவர் புகார் எதுவும் அளிக்கவில்லை. இருப்பினும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.