பிரபல நடன இயக்குநரும், நடிகருமான கணேஷ் ஆச்சார்யா, பெண் நடன இயக்குநர் ஒருவரை ஆபாச வீடியோ பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குநர்களுள் ஒருவரான கணேஷ் ஆச்சார்யா, தமிழில் நடிகர் ஜீவா நடித்த ரவுத்திரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் மீது மகாராஷ்ட்ர மகளிர் ஆணையம் மற்றும் காவல் நிலையத்தில் பெண் நடன இயக்குநர் ஒருவர், பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், கணேஷ் ஆச்சார்யா தன்னை ஆபாச வீடியோ பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும், தனது வருமானத்தின் ஒரு தொகையை கமிஷனாக தரவேண்டும் என அவர் வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.