நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக விசாலின் பாண்டவர் அணி சார்பில் திங்கள் கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கக் கட்டிடம் முழுமையடையாமைக்கு ஐசரி கணேஷ் தான் முழு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதனிடையே நடிகர் சங்க தேர்தலில் பாக்கியராஜ் தலைமையில் போட்டியிட்ட சுவாமி சங்கரதாஸ் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஐசரி கணேஷ், நடிகர் சங்கத்தின் கஜானாவை விஷால் காலிசெய்துள்ளதாக குற்றம்சாட்டினார். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விஷால் மேல்முறையீடு செய்வது, நடிகர் சங்கத்திற்கு செய்யும் துரோகம் என்றும் சாடினார்.