ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர் ஹாலிவுட் நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஹாலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக உள்ள ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இவற்றில் சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியூயார்க் போலீசாரால் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே 1990 காலகட்டத்தில் ஹார்வி தம்மை பலாத்காரம் செய்ததாக 59 வயதான நடிகை அனபெல்லா சியோரா புகார் கூறி உள்ளார். மன்ஹாட்டன் நகரில் உள்ள தனது வீட்டில் வைத்து தன்னை ஹார்வி, பலாத்காரம் செய்த தாக அவர் தெரிவித்துள்ளார்.